1. செய்திகள்

ஆஸ்கர் தம்பதியை நம்ப வைத்து ஏமாற்றினாரா இயக்குனர்? அதிர்ச்சி தகவல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
The Elephant Whisperers Bomman and Bellie tells shocking incident

ஆஸ்கர் தம்பதிகளான யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் மற்றும் பெல்லியினை ஆவணப்பட இயக்குனர் ஏமாற்றியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. நேற்று தான் இவர்களை சந்திக்க இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைப்பெற்ற 95- வது அகாடமி விருது நிகழ்வில் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது. படத்தின் மைய கதாபாத்திரங்களான யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆவணப்படம் தொடர்பான சில காட்சிகளை படமாக்க தங்களிடம் பணம் வாங்கியதாக அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பொம்மன் மற்றும் பெல்லி தெரிவித்துள்ளனர். வாங்கிய பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகின்றனர் எனவும் சமீபத்தில் சென்னையில் உள்ள யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆஸ்கர் தம்பதியினர் தெரிவித்துள்ளது பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

பேட்டியில் அவர்கள் கூறிய மைய விவரம் பின்வருமாறு-

“படத்தில் நடித்த எங்களுக்கு பணம் தரவில்லை. ஆவணப்படத்தில் இடம்பெறும் திருமண காட்சியை படமாக்க தன்னிடம் பணம் இல்லை என்று இயக்குனர் கார்த்திகி கூறினார். எனவே, எங்கள் பேத்தியின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து காட்சிக்கு செலவு செய்தோம். அந்த பணத்தை இயக்குனர் இன்னும் திருப்பி தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டதுடன், எங்களுக்காக கார் மற்றும் நிலம் வாங்கித் தந்ததாக இயக்குனர் கூறுவது அனைத்தும் பொய்யானவை” என குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் கூறுகையில், ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு தான் மன அமைதியை இழந்ததாக பெல்லி தெரிவித்துள்ளார். “படப்பிடிப்பின் போது, இயக்குனர் சொன்னதையெல்லாம் செய்தோம்; என் பேத்திக்கு கதை சொல்வது முதல் டீ போடுவது, துணி துவைப்பது, கும்கி யானைகளை குளிக்க வைப்பது வரை."

"இயக்குனர் எங்களுக்கு டீ கூட வாங்கி தரவில்லை. திரைப்படத்தின் மூலம் நாங்கள் பெற்றதெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு வழங்கிய ரூ.1 லட்சம் மட்டுமே” என்றார்.

தனியார் யூ-டியூப் சேனல் ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க அவரை அணுகியபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதனிடையே சனிக்கிழமை இரவு ஆவணப்படத்தை தயாரித்த சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்கர் தம்பதியின் குற்றச்சாட்டுகளை மறுத்து, பெல்லி மற்றும் பொம்மனுக்கு அவர்களின் ஒப்பந்தத்தின்படி முறையாக இழப்பீடு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தடைந்த நிலையில் மசினகுடியில் இருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று அங்கு ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி மற்றும் 37 யானை பாகன்களை சந்தித்து குடியரசுத் தலைவர் உரையாடிய நிலையில், இப்பிரச்சினை வெளிவந்துள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

மேலும் காண்க:

45 நாட்களில் 50 லட்சம்- தலைகால் புரியாத மகிழ்ச்சியில் தக்காளி விவசாயி

10 நிமிடம் தியானம் பண்ணா போதும்- இந்த 7 நன்மை உங்க பாக்கெட்டுல

English Summary: The Elephant Whisperers Bomman and Bellie tells shocking incident Published on: 06 August 2023, 01:33 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.