1. செய்திகள்

திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற தீப திருவிழா கொண்டாட்டம்

KJ Staff
KJ Staff
The famous Deepa festival celebration in Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4  மணிக்கு கோவில் கருவறையில் வேதமந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது .இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6  மணிக்கு 2 ,668 அடி உயர மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.                   

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலாக கருதப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு திருக்கார்த்திகை தீப திருநாளானது 10  நாட்களுக்கு  கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தீப திருவிழா கொடியேற்றம் கடந்த 27ம் தேதி தொடங்கியது. துவக்க விழாவின் போது வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலில் உள்ள 67  அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியை ஏற்றினர்.

பரணி தீபம் ஏற்றப்பட்டது

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெறுவது  பரணி தீபம் மற்றும் மகா தீபம்.. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4  மணிக்கு கோவில் கருவறையில் வேதமந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது

மாலையில் மகாதீபம்

இன்று மாலை 6  மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இன்று மாலையில் மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த திருவிழாவை கண்டு மகிழ பல லட்ச பக்தர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

Mandous Cyclone| மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம்| விவசாயிகள் விநாயகரிடம் மனு தாக்கல்| தீப திருவிழா

வீடுகளில் மூலிகை செடி தோட்டம் அமைக்க 50% மானியம்!

English Summary: The famous Deepa festival celebration in Tiruvannamalai Published on: 06 December 2022, 04:52 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.