பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில், தமிழில் பெயர் எழுதும் போது, முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும்' என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் பெயர் எழுதும் போது, 'இனிஷியல்' (initial) எனும் முன் எழுத்தையும், தமிழிலேயே எழுதும் நடைமுறையை, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழில் இனிஷியல் (Initial in Tamil)
முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துக்களையும் தமிழிலேயே எழுத வேண்டும் என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் மீணடும் வலியுறுத்தப்படுகின்றன.
மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரை, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க, தமிழை முதன் முதலில் மாணவர்கள் பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும்.
கல்லுாரி மாணவர்கள் இடையே, தமிழில் பெயர் எழுதும் போது, அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையை, அன்றாட வாழ்வில் ஏற்படுத்த மாணவர்கள் பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகைப் பதிவேடு, பள்ளி அல்லது கல்லுாரி முடித்து பெறும் சான்றிதழ் வரை, அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடன் வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
கையொப்பம் (Signature)
மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட வேண்டும்.
தலைமை செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை, அனைத்து அரசு துறை ஆணைகள் மற்றும் ஆவணங்களில், பொது மக்கள் பெயர்களை குறிப்பிடும் போது, முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுமையையும், தமிழிலேயே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
அரசு துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும், தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பமும், தமிழிலேயே இருக்க வேண்டும்.
பொது மக்களிடம் விழிப்புணர்வு (Awareness) ஏற்படுத்த, அனைத்து அரசு அலுவலகங்களிலும், 'முன்னெழுத்தும் தமிழில், கையொப்பமும் தமிழில்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும்.
மேலும் படிக்க
உலக மண் தினம்: மண்வளம் காக்க உறுதி எடுப்போம்!
தமிழகப் பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு தடை: பொதுமக்கள் எதிர்ப்பு!
Share your comments