சமையலுக்குப் பயன்படக் கூடிய கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யும் முறையினை மறு ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலை மிக உயர்வாக இருப்பது பொதுமக்களுக்கு பெரிய அளவில் சுமையாக இருந்து வருகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு மேல் இருக்கின்றது.
இந்த நிலையில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு தனிக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் குறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றலாமா என்பது பற்றி மறு ஆய்வு செய்யும்படி குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழு தனது பரிந்துரைகளைச் செப்டம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்படுள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல் வாயிலாக தெரிகிறது. எனினும், எரிவாயு விலை குறையும் வகையில் குழு பரிந்துரை செய்தாலும் கூட உடனடியாக எந்த மாற்றம் வராது. படிப்படியாக மாற்றப்படும்.
ஏனெனில், அக்டோபர் மாதம் முதல் அடுத்த எரிவாயு விலை நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என முன்னரே அறிவிக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் தேவை என்பது முக்கியம். ஆகவே, குழுவின் பரிந்துரை சாதகமாக இருந்தாலும் இது நடைமுறைக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க
Share your comments