தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலை சுப நிகழ்ச்சிகள் வைத்துள்ள பலரினை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தங்கத்தின் விலையினைக் குறித்த விரிவான பதிவினை இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க: Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவு! ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்!
தங்கம் விலையில் தொடரும் அதிகரிப்பு, அதனை நடுத்தரவாசிகளுக்கு எட்டாக்கனியாகவே மாற்றிவிடுகிறது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருப்பது, இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுமா? எப்போது?
நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.42,368 யைத் தாண்டி புதிய உச்சம் அடைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடு செய்திருப்பவர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த திசம்பர் 31-ஆம் தேதியில் 41 ஆயிரத்தைத் தாண்டியது. ஒவ்வொரு தினமும் தங்கத்தின் விலை ஏறி தற்பொழுது 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி தொடக்கத்தில் ரூ.41,040-க்கும், 11-ஆம் தேதி ரூ.41,486-க்கும், 12-ஆம் தேதியில் ரூ.41,888-க்கும் விற்கப்பட்டது.
மேலும் படிக்க: விவசாயத்தில் சந்தேகமா? இனி இந்த எண்ணிற்கு அழைங்க!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.5 ஆயிரத்திற்கும் கீழ் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று ரூ.5260க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.42,080க்கு விற்கப்பட்டது.
தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க
ரூ. 100 போதும்! ரூ. 16 லட்சம் லாபம் பெற இன்றே விண்ணப்பியுங்க!!
Share your comments