கொரோனா நிவாரணத் தொகை சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாது என தமிழக அரசு அதிர்ச்சித்தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் சர்க்கரை அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கு உத்தரவு (Full curfew order)
தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 27,397 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 241 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக, தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை வெளியிட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி (Corona crisis)
இதன்படி நாளை காலை 4 மணி முதல் வரும் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் தமிழக மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
திமுக ஆட்சி (DMK rule)
இதையொட்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு ரூ.4,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்துள்ளது.
முதல்வர் கையெழுத்து (CM Signature)
ஆட்சிப் பொறுப்பெற்றதும் 2.07 கோடி அரிசி ரேஷன் கார்டுகளுக்கு முதல் தவணையாக ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அரசாணையில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)
இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
திட்டம் நாளைத் தொடக்கம் (The project starts tomorrow)
அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் 2.07 கோடி பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்க ரூ.4,153.39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
பகல் 12 மணி வரை (Until 12 noon)
அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் நாள்தோறும் 200 டோக்கன்கள் வழங்கப்படும். அதில் குடும்ப அட்டைதாரர் பெயர், ரேஷன் கடை பெயர், பணம் வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதன்படி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணம் வழங்கப்படும். ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும்.
நிவாரணம் கிடையாது (There is no relief)
இந்நிலையில் சர்க்கரை ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு நிவாரண நிதி கிடையாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு கார்டுகளை விரைவாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
கொரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டம் - ஆயுஷ் அமைச்சகம் அதிரடி!
அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்
தொற்றுநோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து அணுகுண்டு எது தெரியுமா?
Share your comments