ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொது மக்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேஷன் பொருட்கள் (Ration items)
நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பல ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வப்போது ரேஷன் கார்டு திட்டத்தில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ரேஷன் கார்டு திட்டத்தில் ஏற்படும் மோசடிகளை தடுப்பதற்காக பொதுமக்கள் கட்டாயமாக தங்களது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைந்திருக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.
மேலும், ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு வரும் ஜூன் 30ம் தேதி வரைக்கும் பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்காத பொது மக்களுக்கு ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் அதற்குள் ஆதார் எண்ணை இணைக்கும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ரேஷன் கர்டுதாரர்களுக்கு இலவச ராகி: மாநில அரசின் அருமையான அறிவிப்பு!
Share your comments