1. செய்திகள்

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
This bank increased the interest - more profit for customers!

ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை கனரா வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், அதிகத் தொகையை ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிக லாபம் பெற்று பயனடைவார்கள்.

ரெப்போ வட்டி

மத்திய ரிசர்வ் வங்கி சில அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியது. இதையடுத்து வங்கிகள் ஒவ்வொன்றாகத் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.

வட்டி உயர்வு

அந்த வகையில் பொதுத் துறை வங்கியான கனரா வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

உயர்வு எவ்வளவு?

தற்போதைய நிலையில் கனரா வங்கியில் 7 நாள் முதல் 45 நாள் வரை முதிர்வு கொண்ட டேர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 3.25 சதவீதமாக உள்ளது. அதேபோல, 46 நாள் முதல் 90 நாள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி 4.25 சதவீதமாக இருக்கிறது. அதேநேரம், 91 நாள் முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்களின் வட்டி 4.5 சதவீதம். 180 நாள் முதல் 269 நாள் வரையிலான காலத்துக்கு 5.9 % வட்டி இருக்கிறது. இதே திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதம் ஆகும்.

வட்டி வீதம்

7 நாள் முதல் 45 நாள் வரை - 3.25%

46 நாட்கள் முதல் 90 நாள் வரை - 4.25%

91 நாட்கள் முதல் 179 நாள் வரை - 4.50%

180 நாட்கள் முதல் 269 நாள் வரை - 5.90%

270 நாட்கள் முதல் 1 வருடம் வரை - 6.00%

1 வருடம் - 6.50%

1 வருடம் முதல் 2 வருடம் வரை - 6.50%

666 நாட்கள் - 7.00%

2 வருடம் முதல் 3 வருடம் வரை - 6.50%

3 வருடம் முதல் 5 வருடம் வரை - 6.50%

5 வருடம் முதல் 10 வருடம் வரை - 7.00%

மேலும் படிக்க...

PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!

English Summary: This bank increased the interest - more profit for customers! Published on: 09 October 2022, 08:58 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.