கரூர் அருகே அரசு - வேம்பு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. ஊரும், உலகமும் செழிக்க வேண்டும் எனவும், விவசாயம் திருமணத் தடை நீங்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதை முன்னிட்டு ஊர்மக்கள் சார்பில், அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாணம் செய்து வைக்க முடிவெடுத்து நடத்தி வைக்கப்பட்டது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த திருக்கல்யாணத்திற்கான திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உள்ளூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு, வெற்றிலை பாக்குடன் திருமண அழைப்பிதழ் வழங்கினர். விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்துக்குப் பிறகு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவால் ஊர்மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் படிக்க: ரூ. 100 போதும்! ரூ. 16 லட்சம் லாபம் பெற இன்றே விண்ணப்பியுங்க!!
கரூர் அடுத்த காக்காவடி ஊராட்சிக்கு உட்பட்ட, கீழ் பசுபதிபாளையம் கிராமத்தில் பழனி ஆண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேகமாக யாகக் குண்டங்கள் அமைக்கப்பட்டுப் பல்வேறு யாக மூலிகையால் சிறப்பான யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முடங்க பூஜக்கப்பட்ட கலசத்திற்கு மகாதீபார்த்தனை காட்டப்பட்ட பிறகு சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தைத் தலையில் சுமந்தவாறு ஆலயத்தைச் சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்திற்கு வந்து பூஜை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து கோபுர கலசத்திற்கு சந்தனப் பொட்டு, பட்டாணி உடுத்தி மாலை அணிவித்த பிறகு மகா தீபாரதனையினைக் காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
மேலும் படிக்க
Share your comments