Tiruvarur-Karaikudi additional train operation!!
திருவாரூர் - காரைக்குடி இடையே இன்று முதல் வாரத்தின் ஐந்து நாட்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வழியாக வாரத்தில் ஐந்து நாட்கள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
இதற்கு முன்னர் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாள்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்பொழுது திங்கள் மற்றும் சனிக்கிழமையும் சேர்த்து மொத்தம் 6 நாள்களுக்கு ரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
திருவாரூர் முதல் காரைக்குடி இடையிலான ரயில் காலை 8.20-க்கு புறப்பட்டு பிற்பகல் 11.45 மணிக்கு சென்றடையும். மறுமுனையில், பிற்பகல் 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வந்தடையும் எனக் கூறப்படுகிறது.
இந்த ரயில் திருவாரூர், மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லை விளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டாங்காடு, பேராவூரணி, ஆயிங்குடி, அறந்தாங்கி முதலாக காரைக்குடி வரை இந்த இரயில் நின்று செல்லும்.
திருவாரூர்-காரைக்குடி வண்டி எண்-06197 எனக் கூறப்படுகிறது. இது திருவாரூரில் காலையில் புறப்பட்டு பிற்பகல் காரைக்குடி சென்றடையும். அதுவே, திரும்பி வரும் நிலையில், மாலையில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு இரவு திருவாரூர் வந்தடையும். இது பெரும்பாலும் பள்ளி மாணவர்களின் பயணத்திற்காகச் செயல்பட இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments