1. செய்திகள்

வாழைக்கான விலை முன்னறிவிப்பு - தோட்டக்கலை வாரியம் அறிவிப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : Vikatan


தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின் படி, 2019-20 ஆம் ஆண்டு இந்தியாவில், வாழை 8.77 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 317.79 இலட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. வாழைகள் கிலோவிற்கு 25 முதல் 40 வரை என அதன் ரகத்திற்கு ஏற்ப முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

வாழை உற்பத்தி

இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் மஹாராஷ்டிரா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தில் கோயம்புத்தூர், தேனி, திருச்சி, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய வாழை சந்தைகளில் திருச்சி மாவட்டம் பல்வேறு பகுதிகளுக்கு வாழைப்பழத்தை அனுப்பும் முக்கிய மையமாக திகழ்கிறது. திருச்சி சந்தைக்கு வாழை வரத்து லால்குடி, புதுக்கோட்டை, முசிறி மற்றும் தேனி ஆகிய பகுதிகளிலிருந்து வருகிறது. தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு புதுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து பூவன் வரத்தும், சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து கற்பூரவள்ளி வரத்தும் வருகிறது. நேந்திரன் வரத்தானது மேட்டுப்பாளையம் மற்றும் கேரளாவிலிருந்து ஜனவரி 2021 முதல் வரத்தொடங்கியுள்ளது. வர்த்தக மூலங்களின் படி, பண்டிகை காலங்கள் காரணமாக வரும் மாதங்களில் வாழையின் தேவைஅதிகரிக்க கூடும்.

வாழை விலை ஆய்வு

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத்திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

வாழை - ரூ.25 - ரூ.40 வரை

ஆய்வின் முடிவின் அடிப்படையில் பிப்ரவரி முதல் மார்ச் 2021 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 35 மற்றும் நேந்திரன் வாழை கிலோவிற்கு ரூ.40 வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க...

தோட்டக்கலைதுறை சார்பில் கட்டப்பட்ட இரண்டு பூங்காக்கள் திறப்பு!

தேங்காய் மற்றும் கொப்பரை விலை வரும் நாட்களில் எப்படி இருக்கும்? TNAU கணிப்பு!

நவரை பருவத்துக்கான நெல் விதைகள் - மானிய விலையில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!

பயிர் சேத அறிக்கை வரும் 29ம் தேதிக்குள் அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவு! - விவசாயிகளுக்கு விரைந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை!!

English Summary: TNAU relesed the Price Forecast for Banana for Upcoming days Published on: 23 January 2021, 05:04 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.