மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் எனத் தமிழக மின்விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதுக்குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் கார்டு இணைப்பு குறித்து சிலர் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆனால், ஆதார் எண் கட்டாயம் இணைத்தல் வேண்டும். பெயர் மாற்றம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மின் துறையில் சீர்திருத்தம் செய்ய ஆதார் இணைப்பு அவசியம். போராட்டம் அறிவித்துள்ள சிலரிடம் சாலைகள் இந்த ஒன்றரை வருடத்தில்தான் மோசமானதா என கேட்க வேண்டும். சென்ற ஆட்சியில் போடாத சாலைகளை இந்த அரசு போடுகின்றது. யார் இந்த துறையை நிர்வகித்தார்களோ அவர்கள் போடாத சாலையை இந்த அரசு குறை கூறும் நிலை உள்ளது.
சிறு,குறு தொழில் முனைவோருக்கு கட்டணமாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என கேட்டார்கள். 2500 கோடி ரூபாய் கட்டணத்தை குறைத்து இருப்பதாகக் கூறியுள்ளார். 1.59 லட்சம் கடன் இருக்கும் நிலையில் மின்வாரியம் குறைந்த அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளது கர்நாடகா போன்ற அருகாமை மாநில மின்கட்டணங்களை விட இங்கு கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது. குறைத்து கொடுங்கள் என கேட்பதுதான் சரியாக இருக்கும்.
உயர்ந்த கட்டணம் பிற மாநிலங்களை விட குறைந்த அளவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பது கடினம். தொழில் முனைவோர் மின்வரியம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு ஆதரவைக் கொடுத்து முழுமனதோடு ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
தமிழக அரசின் வரலாற்றிலேயே தொழில் முனைவோருடன் 3 மணி நேரம் முதல்வர் உட்கார்ந்து கோரிக்கைகளை கேட்டு அறிந்துள்ளார். வேறு கோரிக்கைகளை சொன்னால் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார். முன்னதாகக் கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கல்! தமிழக மக்களுக்கு ஜாக்பாட்.?
Share your comments