தமிழ்நாடு தேர்வாணையம் குரூப்-1 பணிக்கான தேர்வு, பணி விவரங்கள், சம்பள விவரங்கள், கல்வித் தகுதி போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரத்தை, இந்தப் பதிவில் காணலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 90 பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு அறிவிப்பை இன்று (28.03.2024) வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதம் 13 ஆம் தேதி 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதவி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.
இன்று முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து பணியிடங்களுக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 34-க்குள் இருக்க வேண்டும்.
இதில் எம்பிசி, டிசி, பிசி முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி தேர்வாளர்களுக்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த கைம்பெண்களுக்கும் 39 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்
பணியிடத்தின் பெயர் | காலி இடங்கள் |
துணை ஆட்சியர் |
16 |
துணை காவல் கண்காணிப்பாளர் |
23 |
உதவி ஆணையர் (வணிக வரித்துறை) | 14 |
துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் |
21 |
ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் | 14 |
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் | 1 |
தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மாவட்ட அலுவலர் | 1 |
மொத்தம் | 90 |
மேலும் முழு தகவல்களை அறிந்திட கீழ்காணும் பக்கத்தை பார்வையிடவும்
https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf
மேலும் படிக்க
AGRISTACK மற்றும் GRAINS திட்ட பணிகளை கண்காணிக்க ஆட்சேர்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
ONDC: விவசாயிகளின் கூட்டமைப்பான FPO லாபம் பார்க்க சூப்பர் வழி!
Share your comments