தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு நடைபெற்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரசு தேர்வாகும். துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முதலிய பணிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தேர்வுக்குத் தயாராவதற்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்பாடப் புத்தகங்களைப் படித்தாலே போதுமானது.
சுமார் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு, கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறவிருந்தது. நிர்வாகக் காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்ட இந்த தேர்வு இன்று நடைபெற்றது.
இந்தத் தேர்வில் பங்கேற்க 3, 22,414 பேர் விண்ணப்பித்திருந்தனர். 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் அமைந்த தேர்வு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு 12.30 மணி வரை நடைபெறுகிறது.
தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன் தேர்வறைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். 9 மணிக்குப் பிறகு தேர்வறைக்கு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று தேர்வு நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க
Share your comments