நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1089 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை நேற்று வெளியானது. அதில் தேர்வு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
நில அளவைப் பற்றிய துறையில் நில அளவர், வரைவாளர் பணியிடங்கள், ஊரமைப்புத் துறையில் அளவர், உதிவி வரைவாளர் காலிப்பணியிடங்களில் 1089 இடங்கள் காலியாக இருக்கின்றன. அதிலும், நில அளவர் பணியில் 798 இடங்கள், வரைவாளர் பணியில் 236 இடங்கள், நகர் ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடங்கள் 55 இடங்கள் என இத்துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
இப்பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்டு 27-ஆம் தேதி ஆகும். அதோடு, விண்ணப்பங்களைத் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 1 முதல் 3-ஆம் தேதி எனக் கூறப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ஆம் தேதி காலையிலும், பிற்பகலிலும் நடைபெறவுள்ளது. காலையில் என்றால் 9.30 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் என்றால் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடத்தப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments