TNUSRB SI ஆட்சேர்ப்பு 2022: பதிவு தொடங்கியவுடன் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம். இந்த பதிவில் இதற்கான முழு விவரத்தையும் தெரிந்துக்கொண்டு பயனடையுங்கள்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (தாலுகா, ஆயுத ரிசர்வ் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்) பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறது. விண்ணப்பதாரர்கள் tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு தொடங்கியவுடன் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 8, 2022 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலியிடங்கள், பதிவு தேதிகள், தேர்வு தேதிகள், விண்ணப்பதாரர்கள் TNUSRB SI ஆட்சேர்ப்பு அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
TNUSRB SI ஆல்சேர்ப்பு 2022: தகுதிக்கான அளவுகோல்
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு தேதியில் UGC/அரசு அங்கீகரிக்கப்பட்ட, ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
TNUSRB SI ஆல்சேர்ப்பு 2022: வயது வரம்புகள்
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 20 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயது வரை இருத்தல் வேண்டும்.
TNUSRB SI ஆல்சேர்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டியிருக்கும். காவல் துறையின் விண்ணப்பதாரர்கள் திறந்த மற்றும் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.
TNUSRB SI ஆல்சேர்ப்பு 2022: தேர்வு அளவுகோல்கள்
விவேட்பாளர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, வைவா ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க...
Share your comments