1. செய்திகள்

தக்காளியை பதுக்கினால் அம்புட்டுதான்- அமைச்சர் கடும் எச்சரிக்கை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
To sell tomatoes from Rs.60 says Tamilnadu minister

தக்காளி விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60-முதல் தக்காளியை விற்பனை செய்வது என தமிழ்நாடு அரசின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காய்கறி வரத்து குறைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளி விலை ஏற்றத்தை தொடர்ந்து பொதுமக்களின் சிரமத்தை குறைப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

அக்கூட்டத்தின் நிறைவுக்குப்பின் அமைச்சர் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு:

இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800 டன் வரையிலான வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், திருச்சியில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 1 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை, மதுரையில் செயல்பட்டு வரும் 4 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்.

மேலும், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வீதம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பீடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவானதாகும். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விலையேற்றம் தற்காலிமானதே, விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அடுத்த மாதம் ஜூலை 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முஹூர்த்தம் நாட்கள் வேற வருவதால் தக்காளியின் தேவை இன்னும் அதிகரிக்கும், என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண்க:

70 வயது விவசாய தொழிலாளியை நேரில் அழைத்து பாராட்டிய இறையன்பு- என்ன விஷயம்?

English Summary: To sell tomatoes from Rs.60 says Tamilnadu minister Published on: 27 June 2023, 07:13 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.