புதுச்சேரியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்குள் இயற்கை விவசாயம் செய்யவும், கால்நடை வளர்க்கவும் கைதிகளுக்குச் சிறைத்துறை உதவி செய்து வருகிறது. சிறையில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் வாழை அன்னாச்சி, அகத்தை உட்பட சுமார் 67 பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இது போன்ற செயல்பாடுகள் கைதிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறையில் இருந்து வெளியே செல்லும் போது திறன்களை வளர்ப்பதற்கு உதவும் எனச் சிறைத்துறை தலைவர் திரு ரவிதீப் சிங் சாகர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: இனி அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்!
சிறந்த டிராக்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க விவசாயிகளுக்கு அழைப்பு
கடந்த 2019 தொடங்கப்பட்ட ITOTY என்ற அழைக்கப்படும் Indian Tractor of the Year ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டிராக்டர் தயாரிப்புகளுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகின்றது. கடந்த ஆண்டு 2021-ற்கான Indian Tractor of the Year விருது சோனாலிகா டைகர் 55- க்கு வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்கான விருதுக்கு தகுதியான நிறுவனத்தைத் தேர்வு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் www.itoty.org/voting என்ற இணைய தளத்திற்குச் சென்று தங்களுக்கு விரும்பிய டிராக்டர் நிறுவனத்திற்கு வாக்குகள் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குவியும் சலுகைகள்!
அரிசி விற்பனைக்குத் தடை விதிக்கத் திட்டம்
உள்நாட்டு விலைவாசியினைக் கட்டுப்படுத்துவதற்காக கோதுமையின் ஏற்றுமதிக்குத் தடை விதித்த மத்திய அரசு, தற்பொழுது அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் இருப்பதாகக் கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் உள்நாட்டுச் சந்தையில் அரிசியின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படும் என்ற ஊகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
மின் வாரிய பணியாளர்கள் கட்டாயம் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவு
மின்வாரிய பணியாளர்கள் அனைவரும் சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அலுவலகத்துக்கு கேஷுவல் உடை அணிந்து வர கூடாது எனத் தெவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சேலை, சுடிதார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம் எனவும், வேட்டி மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் உடைகளை ஆண்கள் அணியலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!
தங்கத்தின் விலை மேலும் கூடுமா?
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவிற்கு எதிராக தங்கம் இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என ஜெர்மனியில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, சுவிட்சர்லாந்திடம் இருந்து தான் அதிகப்படியான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற வர்த்தக மையங்களில் ரஷ்யாவிலிருந்து வரும் தங்கம்தான் அதிகம் புழங்கி வருகிறது. இந்த நிலையில், நாடுகள் ரஷ்யத் தங்கத்தை இறக்குமதி செய்ய மறுக்கும் பட்சத்தில், உலகில் சீனாவிற்குப் பிறகு அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கக் கூடிய இந்தியாவிற்குத் தேவையான தங்கம் கிடைக்காது. எனவே, தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நியமிக்கும் விவகாரத்தில் எவ்வாறு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களைத் தெரிந்துகொள்வது என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதில், இடைநிலை ஆசிரியர் காலி இடங்களை அப்பகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் எனவும், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
Share your comments