ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ. 6 லட்சம் மானியம் அறிவிப்பு, விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார், அதிகமாக விற்பனையான எள்: விவசாயிகள் மகிழ்ச்சி, தமிழகத்தில் சிறப்புற செயல்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம், Krishi Mela 2022 நான்கு நாள் வேளாண் கண்காட்சி, கொள்ளிடம் ஆற்றில் 25,926 கன அடி நீர் திறப்பு முதலான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ. 6 லட்சம் மானியம் அறிவிப்பு!
ஒருங்கிணைத்த சிப்பம் கட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில், தோட்டக்கலைத்துறையும், HDFC வங்கியும் இணைந்து விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்பிற்கான நிதி விளக்க கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்குத் தேவைப்படும் கடனுதவிகள், மானியங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டன. அப்போது, ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை ரூ.17.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.6.12 லட்சம் மானியம் அதாவது 35 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!
விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, தி.மு.க. தொடக்க நாள் விழா என மூன்றும் இணைந்த முப்பெரும் விழா கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி விருதுநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் எழுதிய 4,041 கடிதங்கள், 21 ஆயிரத்து 510 பக்கங்கள் கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பும் வெளியிடப்பட்டது. விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கூடினர்.
மேலும் படிக்க: TNPSC: கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
விழாபந்தல் சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. விருதுநகரே விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறப்புற நடந்து முடிந்த முப்பெரும் விழாவிற்காக, அதனை ஏற்பாடு செய்த குழுவிற்கும், பங்குபெற்ற தொண்டர்களுக்கும், உறுதுணையாக நின்ற அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிகமாக விற்பனையான எள்: விவசாயிகள் மகிழ்ச்சி!
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 124 மூட்டைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. கருப்பு ரக எள் 128 ரூபாய் 69 காசுக்கும், சிவப்பு ரக எள் 142 ரூபாய் 20 காசுக்கும் விற்பனையாகின. இப்படியாக, 1,027 கிலோ எடையுள்ள எள் சுமார் 11 லட்சத்து 71 ஆயிரத்து 867 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
Krishi Mela 2022 நான்கு நாள் வேளாண் கண்காட்சி!
விவசாயத்துறையில் மேன்மையுறும் நோக்கில் Krishi Mela 2022 நான்கு நாள் வேளாண் கண்காட்சி, தில்லி வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயத்திற்குத் தேவையான உபரகரணங்கள், சொட்டு நீர் பாசன முறை, பட்டு வளர்ப்பு, மீன் வளப் பெருக்கம், கோழி வளர்ப்பு, பால்பண்ணை அமைத்தல் என விவசாயம் சார்ந்த அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் பயன்படும் இயந்திரங்களும், விதைகளும், உரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான விவசாயம் சார்ந்த வியாபாரிகள் க்ரிஷி மேளாவில் இடம்பெற்றுள்ளனர். இவ்விழாவில் கிரிஷி ஜாக்ரன் குழுவினரும் பங்குபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மின் கட்டண உயர்வை நிறுத்துங்க: பின்னலாடை தொழிலார்கள் கோரிக்கை!
Share your comments