ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க ரூ. 50,000 மானியம் அறிவிப்பு, மரம் நடுவதை ஊக்குவிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வருமானத்திற்கு மாற்று வழியைக் கண்டுபிடித்த தேங்காய் விவசாயிகள், ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த 25 கோடி லாட்டரி பரிசு, சமையல் சிலிண்டர் வாங்க மிஸ்டு கால் போதும்: புதிய வசதி அறிமுகம், தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சர் தகவல் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
மரம் நடுவதை ஊக்குவிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
தமிழக பள்ளிகளிலும், பள்ளிக்குழந்தைகளிடமும் மரம் நடுதலை ஊக்குவிக்க வேண்டும் எனத் தஞ்சையில் நடைபெற்ற பள்ளி விழாவில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார். மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்ற வாசகத்தினையும் பள்ளிக் குழந்தைகளிடையே தெரிவித்துள்ளார். பள்ளிகளில் புதுப்புது ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று மரம் வளர்த்தல் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளார். இது படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!
ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க ரூ. 50,000 மானியம் அறிவிப்பு!
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிலையான வருமானம் கிடைத்திட வழிவகை செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், தமிழக அரசு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.50,000 மானியம் வழங்க உள்ளது. இந்த மானியமானது, நெல் சாகுபடி, தேனி வளர்ப்பு, பழ மரங்கள் வளர்ப்பு, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க வழங்கப்பட இருக்கிறது எனத் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராணி அறிவித்துள்ளார்.
வருமானத்திற்கு மாற்று வழியைக் கண்டுபிடித்த தேங்காய் விவசாயிகள்!
தேங்காய்க்குக் கட்டுபடியான விலை கிடைக்காததால், தென்னங்கன்று வளர்த்து விவசாயிகள் விற்கத் துவங்கியுள்ளனர், தேங்காய் விவசாயிகள். கடந்த ஓராண்டாக, தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு தேங்காய், 9-லிருந்து 10 ரூபாய் என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர். தொடரும் விலை வீழ்ச்சியால், பலர் தென்னை மரங்களின் பராமரிப்பைக் கைவிட்டுள்ளனர். இந்நிலையில், தேங்காயைத் தென்னங்கன்றாக வளர்த்து, விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். ஒரு ஜோடி தென்னங்கன்று, அதன் வயதுக்கேற்ப, ஜோடி, 125 முதல், 250 ரூபாய் விற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த 25 கோடி லாட்டரி பரிசு!
கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவு அறிவிப்புகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓணம் பம்பர் 2022 முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்டன. லாட்டரி சீட்டு குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ 25 கோடி அறிவிக்கப்பட்டது. 25 கோடி ரூபாய் முதல் ரூ 1,000 வரை என பலதரப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டன. முதல் பரிசான ரூ.25 கோடியைத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வென்றுள்ளார். இரண்டாவது பரிசான ரூ.5 கோடியை கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்துள்ளது
டாடா மோட்டார்ஸ்-இன் ஓய்வு பெற்ற அதிகாரி கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!
டாடா மோட்டார்ஸ்-இன் ஓய்வு பெற்ற அதிகாரி திரு. வெங்கடேஸ்வரன் இன்று கிரிஷி ஜாக்ரன் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். ஒரு நிறுவனத்தினை எவ்வாறு சிறப்புற நடத்துவது என்பதற்கு கிரிஷி ஜாக்ரன் ஒரு சிறந்த உதாரணம் எனப் பாராட்டினார். அரசு அறிவிக்கும் பல சலுகைகள் விவசாயிகளை நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்றால் இவர்கள் போன்ற விவசாயத்தினை ஊக்குவிக்கும் பத்திரிக்கையாளர்கள் அவசியம் எனக் கூறினார். இக்கூட்டத்தில் கிரிஷி ஜாக்ரன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான எம்.சி.டாம்னிக், இயக்குனர் சைனி டாம்னிக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் குழுவினர் பங்குபெற்றனர்.
மேலும் படிக்க
இன்றைய வேளாண் செய்திகளும் மானியத் தகவல்களும்!
10,000 புதிய வேலை வாய்ப்புகள்! கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின்!!
Share your comments