கடந்த வாரம் உயர்ந்த தங்கத்தின் விலை, இன்று குரைன்டர்த்துள்ளது. இந்த வாரம் மட்டும் நான்கு முகூர்த்த நாட்கள் மேலும் கார்த்திகை மாதம், சுப காரியங்களுக்கு உகுந்த மாதம் என ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் தங்கத்தின் தேவை அதிகரித்திருந்தது, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.
கொரோனா தொற்று பாதிப்பால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் விவேகமாக தங்கத்தை வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று கனிசமாக குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை மாற்றத்தைப் பார்த்தால், 8 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் (22 காரட்) 4,514 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை (22 காரட்) 64 ரூபாய் குறைந்து 36,112 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கமும் ஒரு கிராம் 21 ரூபாய் குறைந்து 4,904 ரூபாயாகவும், ஒரு சவரன் 168 ரூபாய் குறைந்து 39,232 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ 65.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 100 குறைந்து, ரூ. 65,500 க்கும் விற்பனை ஆகிறது.
மேலும் படிக்க:
Share your comments