கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிவைக்கப்பட்ட திறந்தவெளி தக்காளி சந்தை மைதானத்தை வியாபாரிகளுக்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டால், ஒரு கிலோ தக்காளி விலையை ரூ.40க்கு விற்க தயார் என்று வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதி மன்றத்தில் முறையிடப்பட்டது.
தமிழகத்தில் சில நாட்களாக விண்ணைத் தொடும் அளவுக்கு தக்காளி விலை உயர்ந்து, பெட்ரோல்,டீசல் உடன் போட்டியில் உள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை ரூ.140 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமலே சில நாட்களாக சமையல் செய்து வருகின்றனர். தக்காளியால் சமைக்க கூடிய பல உணவுகள் அதாவது தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி தொக்கு ஆகியவை ஒதுக்க படுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், உயர் நீதிமன்றத்தில் ஆர். சுரேஷ் குமார் முன்னணியில் தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில், வக்கீல் சிவா ஆஜராகி நேற்று ஒரு முறையீடு செய்துள்ளார்.
நேற்று அவர், கொரோனா நெருக்கடி காரணத்தால் கடந்த ஆண்டு 2020 மே 5ஆம் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டது,அதற்கு பிறகு அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மீண்டும் மார்க்கெட் திறக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் அளவில் ஒரு மைதானம் உள்ளது. இங்கு தான் தக்காளி ஏற்றி நிறைய லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறங்கும்.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திருந்தாலும் இந்த மைதானத்தைத் திறக்க அனுமதி இல்லை. முன்பு இந்த மைதானத்தில் தக்காளியுடன் வந்த 11 லாரிகளை மைதானத்தில் நிறுத்தி அதிகாரிகள் மைதானத்தின் நுழைவாயில்களை பூட்டினர்.பல நாட்களுக்கு பின்பு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு அழுகிய தக்காளிகளுடன் லாரிகள் வெளியே எடுக்கப்பட்டன.இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது.
தற்போது, இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்ப்பூர், உதய்பூர்,நாக்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆந்திர கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகளை கொண்டு வந்து, மைதானத்தில் சரக்குகளை இறக்க முடியும்.இதன் மூலம் தக்காளி விலையை அதிரடியாக குறைக்க முடியும்.கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தராயராக உள்ளது என்று நேற்று முறையிடப்பட்டது.
மேலும் படிக்க:
தக்காளி விலை: யார் லாபம் பெறுவார்கள்?இடைத்தரகர்களா, விவசாயிகளா?
Share your comments