பசுமை பண்ணை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு தேவையெனில் ரேஷன் கடைகளில் விநியோகிக்க திட்டம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் உள்ளூர் சந்தையில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கிலோ ரூ.120க்கு மேல் விற்பனையாகிறது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பசுமை கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கடந்த ஆண்டு தக்காளி விலை ஏற்றத்தின் போது அரசு விலை குறைத்ததை போல, இந்த ஆண்டும் தக்காளியின் விலை கிலோ ரூபாய் 70 க்கு குறைக்கப்படும் கூட்டுறவுத் துறை சார்பில் செயல்படும் பசுமைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி தற்போது கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தக்காளி ரூ. 70 முதல் ரூ. 85 வரை தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வதைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கூட்டுறவுத் துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை.
2021 வடகிழக்கு பருவமழை காலத்தில், கூட்டுறவுத் துறை நடத்திவரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 27.11.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1100 மெட்ரிக்டன் அளவிற்கும் ரூ.4 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கூட்டுறவுத் துறையின் மூலம் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக 4 மெட்ரிக் டன் தக்காளி இன்று நுகர்வோர் விற்பனை நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும்.
இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறை மூலம் இயங்கும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத் துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும், தக்காளி தேவைக்கு ஏற்ப நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.”
மேலும் படிக்க:
செயல்பாட்டிற்கு வர காத்திருக்கும் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள்
Share your comments