1. செய்திகள்

கோடையில் மக்களை ஈர்த்து கொண்டிருக்கும் "tredyfoods" மாம்பழங்கள்: விற்பனையில் அதிகரித்து வரும் சேலத்து மாம்பழம்

KJ Staff
KJ Staff

மாம்பழம், முக்கனியில் முதல் கனியாகவும், பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழமாகவும் இருப்பதால் என்னவோ கோடையில் மட்டுமே அதிகமாக சாகுபடி செய்ய படுகிறது.

மாம்பழத்திற்கு டிமாண்ட் அதிகரித்து கொண்டே போகிறது. மாம்பழத்திற்கு பேர்போன சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்களின் மனமும், சுவையும் மாறாமல் இருப்பதால் அதற்கு மாம்பழ சந்தையில் தனி இடம் உண்டு.

பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, செந்தூரா போன்ற வகை மாம்பழங்கள் தென் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10.000 ஏக்கர் அளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாம்பழ ப்ரியர்களுக்காகவே தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைன் மூலமாக ஆர்கானிக் மாம்பழங்களை விற்பனை செய்யும் சேவையை தொடங்கி உள்ளது.

மாம்பழத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு "tredyfoods" என்ற நிறுவனம் ஆன்லைன் மூலமாக விற்பனையில் பிரபலமாகி வருகிறது. உணவுகளை மக்கள் ஆன்லைனில் மூலம் ஆடர் செய்து கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஆர்கானிக் மாம்பழங்களை வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்து வருகிறது.

ஆரோக்கியமான, இயற்கையான, தரமான மாம்பழங்களை "tredyfoods" விற்பனை செய்கிறது. இது சற்று வித்யாசமாக இருந்தாலும், மாம்பழ பிரியர்கள் ஆர்வத்துடன் ஆடர் செய்து சுவைக்கின்றனர். 

அனைத்து வகையான  மாம்பழங்களையும், மக்களின் தேவைக்கும் ஏற்ப விற்பனை செகிறார்கள். மாம்பழத்திற்கு பெயர்போன சேலத்தில் இருந்து கொள்முதல் செய்து விநியோகிக்க படுகிறது என்பது சிறப்பு தகவல் ஆகும்.

முற்றிலும் இயற்கையாக விளைகின்ற மாம்பழங்களை விவசாகிகளிடமிருந்து  நேரடியாக கொள்முதல் செய்கிறார்கள். மல்கோவா, இமாம் பாஸாத், சேலம் மல்கோவா, அல்போன்சா ஆகிய மாம்பழ வகைகள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோடையில் வீட்டில் இருந்த படியே நமக்கு பிடித்த மாம்பழத்தை சுவைக்கலாம்.

இந்த மாம்பழங்களை www.tredyfoods.com இல் ஆடர் செய்யலாம். மக்கள் கோடை வெய்யிலில் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் ஆடர் செய்து "tredyfoods" மாம்பழங்களை சுவைக்கலாம், மற்றும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம்.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

English Summary: "tredyfoods" farm fresh mangoes online delivery: summer season special Published on: 25 May 2019, 02:54 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.