1. செய்திகள்

'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டதின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு

KJ Staff
KJ Staff
Housing Scheme

பட்ஜெட் தாக்கல் செய்ய இரு தினங்களே உள்ள நிலையில் வரி விதிப்பு, வரி விலக்கு குறித்த பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. புதிய செய்தியாக  உபயோக படுத்தலாமல் வைத்திருக்கும் காலி மனைகளுக்கும், இந்த பட்ஜெட்டில் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.    

இரண்டாம் முறையாக பதவி ஏற்றுள்ள பாஜக அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை செய்து வருகிறது. கடந்த ஆட்சியில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுக படுத்தினர். அதில் ஒன்று  'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்', இதன் நோக்கம் அனைவருக்கும் சொந்த வீடு. குறிப்பாக  பொருளாதாரதில்  பின்தங்கியவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்கள்

1.பின்தங்கிய பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கும் மிகாமல்),

2.குறைந்த வருவாய்ப் பிரிவினர் (ஆண்டு வருமானம் 3 லட்சம்-6 லட்சம் வரை)

3.நடுத்தர வருமான பிரிவினர் - 1  (ஆண்டு வருமானம் 6 லட்சம் - 12 லட்சம் வரை)

4.நடுத்தர வருமான பிரிவினர் - 2  (12 லட்சம் - 18 லட்சம் வரை)

Pratan Mantri Avvas Yojana

மத்திய அரசு 2022 -ம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 20 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணியதுள்ளது. இதற்காக சிஎல்எஸ்எஸ் (Credit Linked Subsidy Scheme) அதாவது கடனோடு இணைந்த வட்டி மானியம் என்கிற வட்டிச் சலுகையை அறிமுக படுத்தி, வழங்கி வருகிறது.

நம் நாட்டை பொறுத்தவரை வேளாண் நிலங்கள், வேளாண் செய்யாத நிலங்களில் பெருமளவிலான கருப்பு பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இதன் காரணமாகவே பல இடங்களில் மார்க்கெட் மதிப்பை விட அதிகமாக  மனைகள், விளை நிலங்கள் விற்க படுவதாக கூறப்படுகிறது.

வீட்டு மனைகளின் மதிப்பு அதிகமாக இருப்பதால் மனைகள் வாங்குவது சாமானியர்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது. பயன்படுத்தாத மனைகளின் மீது வரி விதிக்கப்படும் பட்சத்தில் தேவை இல்லாத இடங்களை மக்களாக முன்வந்து விற்பார்கள் என அரசு எண்ணுகிறது. தற்போது அனைவருக்கும் வீடு வழங்குவதில் அரசுக்கு சில சிக்கல்கள் உள்ளன. திட்டத்தை அமல் படுத்த போதிய காலி மனை இல்லை. இதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் வரி விதிக்க வாய்ப்புள்ளது.   

காலி மனைகளின் மீதான வரி விதிப்பு  5% முதல் 9%  வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மனைகளின் மதிப்பு வரும் ஆண்டுகளில் கணிசமாக குறையவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது காலியாக இருக்கும் நிலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்ப படுகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Under the 'Pradhan Mantri Awas Yojana' program, Government Target is to Build 20 Million houses

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.