இன்று தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகிணங்க, ஆவின் சென்னை பெருநகர மொத்த விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விற்பனை அதிகரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
இவ் அலோசனை கூட்டம் பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:-
எதிர்வரும் மழைக்காலம், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகிக்க வேண்டும். பால் விற்பனை மையங்கள், பாலகங்கள் ஆகியற்றுக்கு அதிகாரிகள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பால் விநியோகம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களைப் பெற 18004253300 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @AavinTN முக நூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க:
PMEGP: புதிய தொழில் தொடங்க 17.50 லட்சம் கடன் அரசு அறிவிப்பு!
Share your comments