தமிழக தென்னை விவசாயிகளிடம் இருந்து 40 ஆயிரம் டன் கொப்பரைத் தேங்காய்களை மாநில அரசு கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில், தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக விளைச்சல் அதிகமாக உள்ள காலகட்டத்தில், விவசாயிகளுக்கு உதவும் வகையில், விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது வழக்கம்.
மேலும் மத்திய அரசின் கீழ் இயங்கும், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பாபு ( National Agricultural Cooperative Marketing Federation of India) வாயிலாக, இந்த கொள்முதல் நடைபெறும்.
அதன்படி தென்னை விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று,, விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
மத்திய அரசு அனுமதி (Centre Government approves)
இதனை ஏற்றுக்கொண்டு, தமிழக தென்னை விவசாயிகளிடம் இருந்து நடப்பாண்டில், 40 ஆயிரம் டன் கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில், 39 ஆயிரத்து, 500 டன் அரவை கொப்பரையும், 500 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
கொள்முதல் விலை (procured Rates)
அரவை கொப்பரைக்கு கொள்முதல் விலையாக, கிலோவிற்கு, 99.60 ரூபாயும், பந்து கொப்பரைக்கு கிலோவிற்கு, 103 ரூபாயும் வழங்கப்படும் என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
கடந்த 2019-20ம் ஆண்டில், அரவை கொப்பரைக்கு 95.21 ரூபாயும், பந்து கொப்பரைக்கு 99.20 ரூபாயும் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னதாக 2018-19ம் ஆண்டில், அரவைக் கொப்பரைக்கு 75 .11 ரூபாயாகவும், பந்து கொப்பரைக்கு 77.50 ரூபாயாகவும் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி (Farmers Happy)
கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் கொள்முதல் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, வேளாண் விற்பனைத் துறையுடன் ஒருங்கிணைந்து, ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனைக் குழுக்கள், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு சார்பாக கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்யும். இது இறுதியில் மாநில நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும். பருப்பு வகைகளின் வரிசையில் கொப்பரைக் கொள்முதல் நடைபெறும்.
ஆறு மாதங்களில் கொள்முதல் பணியை முடிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கொப்பரைக்கான பணத்தை, 30 நாட்களில், அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வெளி மார்க்கெட்டில் கொப்பரையின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Elavarase Sivakumar
Krishi Jagran
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்!!
கொரோனா தொற்று நோய்க்கு முகக்கவசமே மருந்து – பிரதமர் மோடி!
Share your comments