1.ஆளில்லா டிராக்டர் தெலுங்கானா மாணவர்கள் சாதனை
தெலுங்கானா வாரங்கலில் உள்ள காகடியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (கிட்ஸ்) மாணவர்கள் ஓட்டுநர் இன்றி ஆட்டோமெட்டிக் முறையில் இயங்கும் டிராக்டரை உருவாக்கிய பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் ஐந்தாவது முறையாக டிராக்டரை இயக்கி சோதனை மேற்கொண்டனர். சோதனையும் வெற்றி பெற்ற நிலையில் இந்த கண்டுபிடிப்புக்கு காரணமான ஆசிரியர், மாணவர்கள் என அனைவரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு, தெலுங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுக்குறித்த தனது டிவிட்டில், ”இது விவசாய தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. சமூகத் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் இளம் கண்டுபிடிப்பாளர்கள், இதுபோன்ற மேலும் பல யோசனைகள் மற்றும் தயாரிப்புகளுடன் வெளிவர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2.குறுவை சாகுபடி- ஆடுதுறை நெல் ரகத்தை (ADT) விரும்பும் விவசாயிகள்
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறுவை விவசாய பருவத்திற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்க்கப்படும் நிலையில் தூர்வாரும் பணிகளும் தீவிரமாகியுள்ளன.
இதையொட்டி, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை பருவத்திற்கு ஆடுதுறை (ADT) நெல் ரகத்தையே விரும்புகின்றனர். ADT 43, ADT 45, ADT 63 வகைகளுக்கு நாற்றங்கால் வளர்க்கப்பட்டுள்ளது. மேலும் திரூர்குப்பம் (TKM) மற்றும் திருப்பதிசாரம் (TPS-5) நெல் ரகங்களை சாகுபடி செய்வதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
3.850 ரூபாய்க்கு ஏலம் போன காக்கடா பூ
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.612-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.850-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.
இதில் மல்லிகை மற்றும் காக்கடா பூக்கள் நல்ல விலைக்கு ஏலம் செய்யப்பட்டது.
4.உலக ஆமைகள் தினத்தை முன்னிட்டு ஆமைக்குஞ்சுகள் கடலில் விடுவிப்பு
உலக ஆமைகள் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் குஞ்சு பொரிப்பகத்தில் தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆமை குஞ்சுகளை விடுவித்தனர். இதை சுப்ரியா சாஹு IAS தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஆமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக அரசின் அறிவிப்பின்படி சென்னையில் 6.30 கோடி ரூபாய் செலவில் அதிநவீன ஆமை பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிக ஆமை குஞ்சு பொரிப்பகங்களை அமைப்பதற்கும், அதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ஆமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம். என்று தெரிவித்துள்ளார்.
5.இன்றைய காய்கறி விலை நிலவரம்
சென்னை சந்தையில் விற்பனையாகின்ற நிலவரத்தின்படி,
தக்காளி: ரூ.20
பெரிய வெங்காயம்:ரூ.15
சின்னவெங்காயம்: ரூ.60
கத்தரிக்காய்: ரூ. 30
வெண்டை: ரூ.15
அவரை:ரூ.60
முள்ளங்கி:ரூ.20
உருளை: ரூ.20
கேரடி: ரூ.50
பீட்ரூட்: ரூ.30-க்கும் விற்பனையாகிவருகிறது.
மேலும் படிக்க
குறுவை சாகுபடி- ஆடுதுறை நெல் ரகத்தை (ADT) விரும்பும் விவசாயிகள்
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி- அவரின் பொறுப்பு என்ன?
Share your comments