சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்., தொழிற்சாலையில், முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், 97 கோடி ரூபாயில் 'ரயில் 18' எனும் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. விரைவில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express)
மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு, 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டு, புதுடில்லி - வாரணாசி, புதுடில்லி - வைஷ்ணோதேவி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சென்னையில் நடந்து வந்த தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சிறிய தொழில்நுட்ப மாற்றங்களோடு தயாரிக்கப்பட்டுள்ள, 3வது வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம், அடுத்த வாரத்தில் நடத்தப்படுகிறது. சோதனை ஓட்டம் முடிந்து, நவம்பரில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
பயணியர் வருகை அதிகமாக இருக்கும் சென்னை சென்ட்ரல் - பெங்களூரு தடத்தில், இந்த ரயில் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, 4வது வந்தே பாரத் ரயில் இந்த மாதம் இறுதிக்குள் தயாரிக்க உள்ளோம். இப்பணிகளை பார்வையிட, மத்திய ரயில்வே அமைச்சர், சென்னை வர உள்ளார் என்று அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: புதிய ரயில் சேவை தொடக்கம்!
பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து சேவை: தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்!
Share your comments