1. செய்திகள்

வந்தே பாரத் இரயில்: சென்னையிலிருந்து 6 புதிய இரயில்கள் இயக்கம்!

Poonguzhali R
Poonguzhali R
Vande Bharat Train: 6 New Trains from Chennai

சென்னையையும் அண்டை மாநிலங்களின் தலைநகரங்களுடன் இணைக்கும் வந்தே பாரத் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆறு இரயில்கள் இயக்கப்பட உள்ளன என்றும் தகவல் வெளிவந்துள்ளது. 160 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய ரயில்களாக, இவை இருக்கும் என எதிர்ப்பார்ர்க்கப்படுகின்றது.

தென்னக ரயில்வே தனது பணியாளர்கள் மற்றும் பராமரிப்புகளை நவீன ரேக்குகளுடன் இணைத்துச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது. அமைச்சகமும், புதிய ரயில்களுக்கான பராமரிப்பு யார்டுகளை தயார் செய்யுமாறு மண்டலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், சென்னைக்கும் அண்டை மாநிலங்களின் பிற தலைநகரங்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதை ரயில்வே இலக்காகக் கொண்டுள்ளது. ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற பிற பிரீமியம் ரயில்களுக்குப் பதிலாக புதிய ரேக்குகள் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இயங்கத் தொடங்கும். இருப்பினும் வழித்தடங்கள், இன்னும் சரிவர தெரிவிக்கப்படவில்லை. விரைவில் தகவல்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"தெற்கு ரயில்வேக்கு வரவிருக்கும் ரேக்குகளை நிர்வகிப்பது குறித்துப் பல சுற்று விவாதங்கள் நடந்து வருகின்றன," என்று ஒரு அதிகாரிகள் வட்டம் குறிப்பிடுகிறது. தற்போதுள்ள சில கோடுகள் அகற்றப்பட்டு, பிட்லைன்களை தயார் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும், நவீன ரேக்குகள் ஒரு தொகுப்பாக வந்து எலக்ட்ரானிக்ஸ்-உந்துதல் கூறுகளைக் கொண்டிருக்கப் போவதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனவே, இந்த புதிய ரேக்குகளைக் கையாள்வது எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதால் பராமரிப்பு ஊழியர்களுக்கு போதுமான பயிற்சி தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பராமரிப்ப்பு ஊழியர்களுக்கு முன்கூட்டிய பயிற்சிகளை தெற்கு இரயில்வே அளிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதோடு, தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு கோட்டத்தால் வந்தே பாரத் ரயில்களுக்காக ஒரு டிப்போவும் உருவாக்கப்படும். இதற்காக மண்டலம் புதிய டெப்போ கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடும் பணியையும் தொடங்கியுள்ளது என்பது நினைவு கொள்ளத்தக்கது ஆகும்.

தற்போது, ​​இரண்டு ரேக்குகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒன்று புது தில்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வழித்தடத்தில் இயங்குகிறது. மற்றொன்று தில்லி-வாரணாசி பிரிவுகளில் இயங்குகிறது.

இந்த ரேக்குகள் இன்டக்ரல் கோச் பேக்டரி (ஐசிஎஃப்) மூலம் தயாரிக்கப்பட்டு, புது டெல்லியின் ஷகுர்பஸ்தி கோச் டிப்போவில் பராமரிக்கப்படுகிறது என்பதும் கூடுதல் தகவல். இந்நிலையில் மேலும் ஆறு இரயில்கள் இயக்கப்படும் எனக் கூறப்படுவது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

ECR: கிழக்கு கடற்கரை சாலை பெயர் மாற்றப்பட உள்ளதா?

தர்மபுர ஆதீனத்தின் 'பட்டினப் பிரவேசம்' தடை: வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்!

English Summary: Vande Bharat Train: 6 New Trains from Chennai! Published on: 05 May 2022, 03:01 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub