தமிழகத்தில் உள்ள காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகிகொண்டு இருக்கின்றனர். இதனிடையே டிச.4 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: வங்கி கணக்கு மூடப்பட கடைசி தேதி! உடனே இதைப் பண்ணுங்க!
தமிழகத்தில் உள்ள காலியாக இருக்கக் கூடிய 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கின்றனர். இதனிடையே டிச.4 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக, அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்பதார்கள், குறுஞ்செய்தி (SMS) வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தைப் பயன்படுத்தி அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கிராம உதவியாளர் பணியிடங்கள்: உத்தேச தேர்வு கால அட்டவணை
அறிவிப்பு வெளிவந்த தேதி: 10.10.2022
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் கடைசி தேதி: 7.11.2022
விண்ணப்பபங்கள் சரிபார்ப்புக்கான தேதி: 14.11.2022
எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வு நடைபெறுவது: 04.11.2022 (ஞாயிற்றுக்கிழமை )
நேர்காணல் தேதி: 15.12.2022 மற்றும் 16.12.2022வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் நியமன ஆணைகள் வழங்கும்படும் தேதி: 19.12.2022திங்கட்கிழமை
கல்வித்தகுதியும் மதிப்பெண்களும்
9ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றால்: 5
12ம் வகுப்பு/டிப்ளமோ/ஐடிஐ தேர்ச்சி பெற்றால்: 7
இதர உயர்கல்வி மேற்படிப்புகளுக்கு: 10
எழுத்து தேர்வில்: 30 மதிப்பெண்
இருப்பிடம் பொருத்து: இதற்கு உயர் அளவாக 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் கிராம வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவர் எனில்: 25
விண்ணப்பிக்கும் தாலுகா வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவர் எனில்: 20
100 வார்தைகளுக்கு மிகாமல் கிராமத்தின் விவரம், நிலங்கள் அல்லது கிராமத்தின் வகைப்பாடு (நஞ்சை, புன்செய்) அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் விரும்பும் தலைப்பின் கீழ் வினாக்கள் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்வுக்கு தாயாரகி வருபவர்கள் மேலே பரிந்துரைக்கும் தலைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க
100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த முடிவா? அதிர்ச்சித் தகவல்!
Share your comments