பொங்கல் பண்டிகை 14 ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலன்று வீடுகளின் முன்பாக சர்க்கரை பொங்கல் , வெண் பொங்கல் வைப்பது வழக்கமாகும். மேலும் பொங்கலுக்கு பல்வேறு காய்கறிகளை கொண்டு கதம்ப குழம்பு வைப்பது வழக்கம். இதனால் ஒவ்வொருவரும் கரும்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க தொடங்கியுள்ளனர். மேலும் புதிதாக திருமணம் செய்தவர்களின் பெற்றோர் தலை பொங்கலுக்காக பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் சென்னையின் பிரபல கோயம்பேடு மார்க்கெட் மற்றும் மாநிலம் முழுவதும் சந்தை வீதிகளில் கூட்டம் அலைமோதகிறது.
பொங்கலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு காய்கறி விலை குறைய தொடங்கியுள்ளது, ஆட்சரியம் அளிக்கிறது. தக்காளி ரூ. 70 லிருந்து 20, உருளைக்கிழங்கு கிலோ ரூ. 25, வெங்காயம் ரூ. 35, பச்சை பட்டாணி ரூ. 100 லிருந்து ரூ. 40 ஆகவும் , கடந்த மாதம் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த முருங்கைக்காய் ரூ. 210 லிருந்து ரூ. 60தும், 50 க்கும், கேரட் ரூ. 70 லிருந்து ரூ. 60, கத்தரிக்காய் ரூ. 70 லிருந்து ரூ. 30க்கும், சேனைக்கிழங்கு ரூ. 15, பொங்கலுக்கு மட்டுமே கிடைக்கும் சிறு கிழங்கு ரூ. 50தும், 40 க்கும், காலிபிளவர் ரூ.30, இஞ்சி ரூ. 80 லிருந்து ரூ.60, பூசணிக்காய் ரூ. 30க்கும் விற்கப்படுகிறது. மிளகாய் மட்டும் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது, கிலோ 20 லிருந்து ரூ. 30 ஆக அதிகரித்துள்ளது. கரும்பு ஒரு கட்டு 200 க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு கரும்பு விலை ரூ.450 முதல் ரூ. 600 வரை விற்கப்பட்டது, குறிப்பிடதக்கது. தேங்காய் ஒன்று 35 க்கு விற்கப்படுகிறது. மஞ்சள் கொத்து 25 க்கும் , வாழைப்பழம் கிலோ ரூ.40தும், ரூ. 50 க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன்:
'கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. புதிய காய்கறிகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளது. அதாவது தினசரி 200 லாரிகள் முதஸ் 350 லாரிகள் வரை காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இன்று மேலும் காய்கறி வரத்து அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது" என்றார்.
இந்த விலை பட்டியல் மொத்த மார்க்கெட்டுனுடையது என்பது குறிப்பிடதக்கது. ஆனால் சில்லரை மார்க்கெட்டில் காய்கறி விலை கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை அதிகம் வைத்து விற்கப்படுகிறது .
அதே நேரத்தில் சர்க்கரை பொங்கல் வைக்க பயன்படும் பொருட்கள் விலை கடுமையாக விலை அதிகரித்துள்ளன. அதாவது, வெல்லம் ( 1 கிலோ ) கடந்த வாரம் 55 க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 5 அதிகரித்து ரூ. 60 க்கு விற்கப்படுகிறது. 100 கிராம் ஏலக்காய் ( முதல் ரகம் ) ரூ.120 லிருந்து ரூ.140தும், ஏலக்காய் ( 2 ம் ரகம் ) ரூ.120 க்கும் விற்கப்படுகிறது . நெய் ( 1 கிலோ ) ரூ. 420 லிருந்து ரூ. 440 ஆகவும், அரை முந்திரி பருப்பு ( 1 கிலோ ) ரூ. 550 லிருந்து ரூ. 650, கால் முந்திரி பருப்பு 200 லிருந்து ரூ. 250 ஆகவும், திராட்சை ரூ. 220 லிருந்து ரூ. 240 ஆகவும், சிறு பருப்பு ரூ. 88 லிருந்து ரூ. 93 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கலுக்கு வைக்க பயன்படும் அரிசி விலையும் அதிகரித்துள்ளது. அதாவது பச்சரிசி ( 1 கிலோ ரூ. 35 லிருந்து 40 ஆக அதிகரித்துள்ளது. புழுங்கல் அரிசி கிலோ ரூ.5, 6 என்று அதிகரித்துள்ளதாக சென்னை கோயம்பேடு மொத்த வியாபாரி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். டிபார்ட்மெண்ட் ஷோரூமில் 10 சதவீதம் அதிகமாகவும், சிறு கடைகளில் 20 சதவீதமும் பொங்கலையொட்டி பொருட்கள் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Share your comments