மத்திய அரசின் வேளாண் மசோதாக்களைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
பொதுவாக குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி, உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம தேதி, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி ஆகிய 4 நாட்களில் கிராமசபைப் கூட்டம் கூட்டப்படுவது வழக்கம்.
கிராம சபை (Village Council )
தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவை அனைத்திலும் ஒரே நேரத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். உண்மையில் நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கொண்டவை கிராம சபைத் தீர்மானங்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களைக் கொண்ட எந்த ஒரு கிராம சபைத் தீர்மானமும், எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
திடீர் ரத்து (Cancelled)
வழக்கப்படி இந்த முறையும் அக்டோபர் 2ம் தேதி கிராமசபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களைக் கண்டித்து திமுக உள்ளிட்ட சில கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
முறியடிப்பு மசோதா
இதனிடையே மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வரைவு மாதிரி மசோதாவை காங்கிரஸ் தயாரித்துள்ளது. இவை, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளில் விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க...
FSSAI ஊழியராக விருப்பமா? நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
கரியைக் காசாக்க நீங்க ரெடியா? 2 லட்சம் வரை சம்பாதிக்க டிப்ஸ்!
Share your comments