ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊர்மக்கள் ஒன்றுகூடி, மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம் செலுத்தி, ரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கம்.
குலதெய்வ வழிபாடு என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். பல்வேறு இடங்களில் சில வித்தியாசமான வழிபாட்டு முறைகள் நடைபெறுவதும் உண்டு. அந்த வகையில் திருச்சியில் நடைப்பெற்ற ஒரு குலதெய்வ வழிபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருச்சி மாவட்டம் அருகில் உள்ள காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான் குலதெய்வம்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊர்மக்கள் ஒன்றுகூடி, மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம் செலுத்தி, ரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கம்.
கொரானா ஊரடங்கு காரணமாக, 7 ஆண்டுகள் கழித்து நேற்று காவல்காரன்பட்டி கிராம மக்கள் மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கிளம்பினர்.
காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த, 11 கோயில் பூசாரிகள் உட்பட சுமார், 1500 பேர், 100 இரட்டை மாட்டு வண்டிகள் உட்பட, 200 வண்டிகளில் இன்று காலை ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர்.
மேலூர் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் சற்று ஓய்வெடுத்த பின்னர், 'வடதிருக்காவிரி' என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் மொட்டையடித்து, பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பின்பு ரங்கநாதரை தரிசிக்க உள்ளனர்.
நாளை வந்தவழியே ஊர் திரும்புகின்றனர். பராம்பரியமாக மாட்டுவண்டிகளில் வந்த கிராம மக்களை, திருச்சி மாநகர மக்கள் வியப்புடன் பார்த்தது ரசித்தனர்.
மேலும் படிக்க
Share your comments