தருமபுரி மாவட்டம், வத்தமலை கிராமத்திற்கு முதன் முறையாக அரசுப் பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பேருந்தில் உற்சாகப் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
அனைத்து பகுதிக்கும் போக்குவரத்துச் சேவை என்பது மிக இன்றையமையாத ஒன்றாகும். இன்னும் மலை கிராமங்களில் இது கிடைக்கப்பெறாத வரமாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று தருமபுர பகுதியில் இந்த வரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
முதன் முறையாகத் தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவையில் தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 75-வது சுதந்திர நாளைக் கொண்டாடும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மினி ஊட்டி என்று அழைக்கப்படக்கூடிய வத்தல்மலைக்கு முதன் முறையாகப் பேருந்து சேவையினை மாண்புமிகுப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சிவசங்கருடன் இணைந்து தொடங்கி வைத்துப் பயணித்தேன் என தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
கரும்புக்கு ஆதாரவிலை ரூ. 252 கோடி அறிவிப்பு: தமிழக அரசு
ரூ. 70 ஆயிரம் கோடியைத் தாண்டிய திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்!
Share your comments