தமிழக மின் நுகர்வோர்களுக்கு போலியான குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பயனர்கள் மின்சாரத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தற்போது மின் வாரியம் எஸ்எம்எஸ் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
மின் கட்டணம் (Electricity Bill)
இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வரை அணைத்து இடங்களிலும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் போலி எஸ்எம்எஸ், லிங்குகள் மூலம் பல விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதனால் ஏராளமான நபர்கள் தங்களின் பண்ணத்தி இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மின் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எஸ்.எம்.எஸ்கள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது உங்களது கடந்த மாத மின் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை அதனை உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில் இன்று இரவுக்குள் மின் விநியோகம் துண்டிக்கப்படும். அதனால் உடனடியாக மின்வாரிய அதிகாரியை இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.
அதுமட்டுமல்ல சில எஸ்எம்எஸ் களில் கட்டணம் செலுத்திய விவரத்தை இந்த ‘வாட்ஸ் ஆப்’ எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் என்கின்றனர். தற்போது மின்கட்டணத்தை சரியாக செலுத்தியவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வருவது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கமளித்த தமிழக மின்வாரியம் இது போன்ற எஸ்.எம்.எஸ்.,கள் முற்றிலும் போலியானது என்று தெரிவித்துள்ளது. மேலும் எஸ்எம்எஸ் களை தமிழக மின்வாரியம் அனுப்பவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் படிக்க
ஆதார் கார்டு கையில் இல்லையா? இனிமே இது போதும்!
தமிழகப் பள்ளிகளில் இனி இதற்கு தடை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
Share your comments