வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று கரையை கடக்க உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரி நிரம்பி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் (Chembarambakkam Lake) இருந்து 5 கண் மதகு வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட உள்ளது.
13 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை - Holiday for 13 Districts
இந்நிலையில், நிவர் புயல் எதிரொலியாக, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது புயல் காற்றின் வேகம் மணிக்கு 145 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட தமிழக கடற்கரை மாவட்டங்களில் உள்ள பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தாழ்வான பகுதி மற்றும் உறுதியற்ற வீடுகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக நிவாண முகாம்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
Nivar cyclone : புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி?
புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!
மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது!
Share your comments