டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை நெல் அல்லது குறுகிய கால நெல் ரகங்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு சம்பா பயிரிடுவதற்கு தயாராக இருந்தனர். மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து கல்லணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வைகை அணையிலும் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு:
தேனி : வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பட்டது. போதிய நீர் இருப்பு உள்ளதால் மதுரை, திண்டுகல்லில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படுகிறது.
இன்று முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் 120 நாட்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறந்துவிடப்படும்.
வைகை அணை நீர் திறப்பின் மூலம் 45,041 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடதக்கது.
இதன் விளைவாக, டெல்டா பகுதி விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை நெல் அல்லது குறுகிய கால நெல் ரகங்களைப் பயிரிட்டு, சம்பா பருவத்திற்குத் தயாராகலாம் எனக் கூறப்படுகிறது. கால்வாய்களில் தூர்வாரும் பணி விரைவில் முடிக்கப்பட்டு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிற பகுதிகளுக்கு வந்து சேரும் என அரசு தெரிவித்துள்ளது.
NEET PG 2022 Result: டவுன்லோட் லிங்க் இதோ!
ஒன்றிய அரசில் 2065 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க ஜூன் 13 கடைசி நாள்
கடந்த நாட்களாகவே நல்ல மழை பொழிவு நிகழ்ந்து வருகிறது. எனவே ஆறுகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரலாறு காணத விதமாக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதத்திற்கு முன்பே தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடதக்கது. இதைத் தொடர்ந்து, சோழ ராஜியத்தின் மற்றொரு சிறப்பான அம்சம் கொண்ட கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இவ் அணைகளின் வரிசையில், தற்போது வைகையும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
நெல் சாகுபடி சரியாக முடிந்தது: எனவே நிலம் தயாரிப்பதற்கான வழிகாட்டி
Share your comments