நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலை நேரங்களில் மேகங்கள் சூழ்ந்தாலும் மழை பொழியவில்லை.
அதே நேரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கடந்த 24 மணிநேரத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவலாவில் 6 செ.மீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை, கோவையில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி போன்ற மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
16 மற்றும் 17ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவையில் இடி மின்னலுடன் மழை பெய்யகூடும். புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் பதிவாகக் கூடும். குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸில் இருக்கும்.
இன்றைய தினம் ஒடிசா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 16ஆம் தேதிவரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் கற்று வீசு கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க:
Share your comments