1. செய்திகள்

நெடுஞ்சாலைகளில் இனி 100 கி.மீ. வேகத்தில் செல்ல கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Highway Speed ,New order by high Court

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டர் என்று அதிகரித்த மத்திய அரசு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில் பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு, உடல் உறுப்புகள் 90 சதவீதம் செயலற்றுப் போனது. அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

மேலும், அந்தத் தீர்ப்பில், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவும், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

அதேபோல, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இதை போன்ற சூழ்நிலைகளில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாலை மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும் வேகம் அதிகரிக்கப்பட்டதாக, மத்திய அரசு கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்து, 2018-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்தது.

மேலும், 2014-ம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிடத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க:

weather: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை!

அரசு வேலைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட தமிழ் மொழித் தாள்!

English Summary: No more than 100 km on highways. Do not go at speed! High Court order! Published on: 14 September 2021, 06:03 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.