தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 26 ஆம் தேதி வரை தொடந்து நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|மாடு வளர்ப்பு பயிற்சி|100 யூனிட் மின்சாரம்|புதிய மின் கட்டணம்|தங்கத்தின் விலை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக, இன்று தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. உள் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும் காணப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Ration Card:ரேஷன் கடைகளில் சிறப்பு வசதி|புதிய மின் கட்டணம்|Aavin பால் விலை உயர்வு|முட்டை விலை சரிவு
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதேபோன்று நாளை தமிழக கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க:PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்
வருகின்ற 24 ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதோடு, வருகிற 25, 26 ஆம் தேதிகளிலும் தமிழகக் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை நிலவும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்குச் சென்னை பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வாய்ப்பு இருக்க வாய்ப்பு இருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தமிழகத்தில் அரசு சார்பில் கலை நிகழ்ச்சி விழா நடத்த அறிவிப்பு!
EPFO சந்தாதாரர்கள் கடகட உயர்வு: ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பயனாளிகளா?
Share your comments