மக்கள் மட்டுமல்ல, யானைகளும் மன அழுத்தத்தை அனுபவிக்கின்றன. அரிசி கொம்பன் யானை மன அழுத்தத்தின் காரணமாகவே இவ்வாறு செய்வதாக மூணாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் அரிசி கொம்பன் யானை முதலில் அமைதியாக இருந்ததாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இவ்வாறு கோபம் கொள்வதாக மூணாறு மக்கள் தெரிவித்தனர்.
அரிசி கொம்பன் யானை முதலில் அரிசி மற்றும் தண்ணீரைத் தேடி கிராமத்திற்குள் நுழைந்தது. ஆம், 36 வயதான அரிசிகொம்பன் யானை, பெரும்பாலும் அரிசியை விரும்பி உண்பதால் தான் அப்பெயரைப் பெற்றது.
அரிசியை விரும்பி தேடி தேடி உண்பதால் தான் இதற்கு அரிசிகொம்பன் என்ற பெயர் உருவானது.
இது 2010ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இருந்த இடமே தெரியாமல் இருந்த அரிசிக்கொம்பன் அதற்கு பிறகு தான், அதாவது தனது 23வது வயதுக்கு பிறகு ஆக்ரோஷமான மிருகமாக மாறியதாக மூணாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.
விளையாட்டாக அவ்வப்போது கோபம் கொள்ளத் தொடங்கிய அரிசி கொம்பன் யானை ஒரு கட்டத்தில் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியதற்கு காரணமே அதற்கு ஏற்பட்ட மன அழுத்தம் தான் என்று மூணாறு மக்கள் தெரிவிக்கின்றார்.
மன அழுத்தத்தில் இருந்த அரிசி கொம்பனை மேலும் உக்கிரமடையச் செய்யும் வகையில் சிலரது நடவடிக்கைகள் அமைந்ததாலேயே இப்படி காண்போரை கதி கலங்க வைக்கும் அளவுக்கு அது பயங்கரமான ஆக்ரோஷ அவதாரத்தை எடுத்துள்ளது.
அரிசி கொம்பனுக்கு உடல் முழுவதும் ரத்தக் காயங்களும், நடக்கக் கூட முடியாத அளவுக்கு சோர்வும் இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இதனிடையே இதனை மயக்க ஊசி மூலம் பிடித்தால் யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் சர்ச்சையை தொடங்குவார்கள் என்பதால் அதனை பிடிக்கும் விவகாரத்தில் மிக கவனமாக கையாண்டு வருகிறது தமிழக வனத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகள் இருப்பிடமின்றி தற்போது ஊருக்குள் அதாவது மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுவது மிகவும் இயல்பாகி வருகிறது. வன ஆக்கிரமிப்பு போன்றவற்றை மிகவும் குறைத்து விலங்குகளுக்கு நிலையான வாழ்விடங்களை உறுதி செய்வதே இதற்கு தீர்வாகும்.
கம்பத்தை கலங்கடித்து வரும் அரிசிகொம்பனை பிடிக்க வனத்துறையினர் 144 தடைவிதித்து இன்னும் போராடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
காடை வளர்ப்பில் கவனம் செலுத்தவேண்டிய சில முக்கிய புள்ளிகள்
மாட்டுச்சாணத்தில் தயாராகும் கோயில் சிலைகள்: இயற்கை விவசாயி அசத்தல்!
Share your comments