1. செய்திகள்

தமிழக முதலமைச்சரின் பரிசு பெட்டகத்தில் இருந்தவை என்ன?

Deiva Bindhiya
Deiva Bindhiya
What was in the gift box of Tamil Nadu Chief Minister?

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், புது தில்லியில். இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்த போது, தமிழகத்திலுள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு புது தில்லிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினை, முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை பொற்றி வரவேற்றனர்.

அவர் சந்திக்க சென்ற முக்கிய பிரமுகர்களுக்கு அவர், தமிழகத்தின் மரபு தானியங்களை பரிசாக வழங்கினார். இதில் இடம்பெற்ற தானியங்களின் பெயர் மற்றும் விபரத்தைப் பார்க்கலாம்.

100க்கும் மேற்பட்ட அரிசி வகைகளாலும், பல வகை சிறுதானியங்களாலும் நிறைந்தது தமிழ் நிலம். இந்நிலத்தின் முக்கிய மரபு தானியங்களே பரிசாக வழங்கப்பட்டன.

  • மாப்பிள்ளை சம்பா (RED RICE) - சிகப்பு நிறத்தால் ஆண்ட்டி, ஆக்சிடண்ட் தன்மையை கொடுத்து நோயின்றி காக்கும் அரிசி.
  • குள்ளக்கார் (RICE FOR ANTI & POST-NATAL WOMEN) - பாலுட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரும் அரிசி.
  • கருப்புக்கவுனி (EMPEROR OR FORBIDDEN RICE) - நெடுங்காலம் அரசர்களுக்கு மட்டும் பயிரிடப்பட்ட ஆந்தோசயனைன் நிறைந்த புற்றைத் தடுக்கும் கருப்பு அரிசி.
  • சீரகச்சம்பா (AROMA RICE OF ARCOT) - பாலாற்றங்கரையில் பயிராகும் தனித்துவ மணம் கொண்ட சுவைமிக்க அரிசி.
  • குடவாழை (RED RICE OF DELTA) - தோலுக்குப் பொலிவு அளிக்கும் மரபு சிகப்பு அரிசி இதுவாகும்.

அருந்தானியங்கள்

  • கம்பு (PEARL MILLET) - அருந்தானியங்களின் அரசன் இவன், அரிசியைவிட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கொண்ட சர்க்கரை நோயாளிக்கான லோ கிளைசிமிக் அரிசி.
  • வரகு (KODO MILLET) - தமிழ் மூதாட்டி அவ்வை விரும்பிக் கேட்டு உண்ட மெல்ல சர்க்கரை தரும் மரபு தானியம்.
  • சாமை (SMALL MILLET) - பழங்குடி மக்கள் பயிராக்கி படைத்திடும் மருத்துவ குணமிக்க சிறுதானியம்.
  • தினை (FOXTAIL MILLET) - கண்ணுக்கும் குழந்தைக்கும் நலம் தரும் பொன்னிற தானியம்.
  • கேழ்வரகு (FINGER MILLET) - இரும்பும் கால்சியமும் நிறைந்த தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவாகும்.

இவ்வாறு தமிழகத்தின் பெருமையை பறைச்சாற்றும் விதமாக, ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களை வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும் படிக்க:

Gokulashtami 2022: கோகுலாஷ்டமி அன்று எவ்வாறு வழிபட வேண்டும்!

2021-22 ஆம் ஆண்டில் முதன்மை வேளாண்மை பயிர்கள் குறித்த 4வது முன் மதிப்பீடு

English Summary: What was in the gift box of Tamil Nadu Chief Minister? Published on: 18 August 2022, 05:50 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.