பயனாளிகளின் தகவல்களை 'பேஸ்புக் (Facebook)' நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம்' என, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், டில்லி உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
பேஸ்புக்
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ் ஆப் (whatsapp) தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, பயனாளிகளின் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும். இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி டி.என். படேல் தலைமையிலான அமர்வு கூறியுள்ளதாவது: தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான மசோதா நிறைவேறும் வரை, தனிநபர் கொள்கையை (Privacy Policy) நிறுத்தி வைப்பதாக வாட்ஸ் ஆப் கூறியுள்ளது. அதனால் பேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் பகிரப்படாது என்றும் உறுதியளித்துள்ளது.
விசாரணை
மேலும், தன் புதிய கொள்கையை ஏற்காவிட்டாலும், சேவையை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளது. அதனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
போராட்ட களத்தை மாற்றினர் விவசாயிகள்: ஜந்தர் மந்தரில் தீவிர போலீஸ் பாதுகாப்பு!
ஒலிம்பிக்கில் கொரோனா பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை!
Share your comments