சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் எதிர்காலத்துக்கு பணத்தை சேமிப்பதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் உதவுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள் மாதம் தோறும் சிறு சிறு தொகையாக செலுத்தி வர வேண்டும்.
பிஎஃப் வட்டி (PF Interest)
ஊழியர் மட்டுமல்லாமல் அவர் வேலை செய்யும் நிறுவனமும் அதே தொகையை தொடர்ந்து செலுத்தி வர வேண்டும். இந்த தொகையெல்லாம் மெல்ல மெல்ல வட்டி சேர்ந்து ஊழியர்கள் பணி ஓய்வுபெறும்போது ஓய்வுக்கால நிதியாக கிடைக்கும். வருங்கால வைப்பு நிதிக்கு ஆண்டுதோறும் வட்டியும் செலுத்தப்படும்.
இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டி.வி.மோகன் தஸ் பாய் தனக்கு வருங்கால வைப்பு நிதி வட்டி கிடைக்கவில்லை என்று ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “அன்புள்ள EPFO, எனக்கான வட்டி எங்கே? பிரதமர் நரேந்திர மோடி சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். அதிகாரிகளின் தவறால் பொதுமக்கள் ஏன் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்?” என்று கேள்வியெழுப்பி இருந்தார்.
இதற்கு நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில், “எந்தவொரு சந்தாதாரருக்கும் வட்டி இழப்பு ஏற்படாது. அனைத்து EPFO சந்தாதாரர்களுக்கும் வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. EPFO அமல்படுத்தியுள்ள சாஃப்ட்வேர் அப்கிரேட் காரணமாக வட்டித் தொகை PF அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை.
வெளியேறும் சந்தாதாரர்கள், பணத்தை எடுக்க கோரும் சந்தாதாரர்கள் அனைவருக்கும் வட்டியுடன் சேர்த்து பணம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்களுக்கு GPF வட்டி: மத்திய அரசு அறிவிப்பு!
SBI vs Post Office: எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்?
Share your comments