1. செய்திகள்

LPG Cylinder மானியம் யாருக்கு கிடைக்கும்? அரசின் புதிய விளக்கம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
LPG Cylinder subsidy

எல்பிஜி சிலிண்டருக்கான மானியம் (LPG Cylinder Subsidy) குறித்த கேள்விகளுக்கு புதிய விளக்கம்!

எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம் (LPG Cylinder Subsidy) வழங்குவது குறித்து நுகர்வோர் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. பலர் தங்கள் கணக்கில் மானியம் வருவதில்லை என்று புகார் கூறி வருகின்றன. அதே நேரத்தில், எரிவாயு சிலிண்டர்கள் மீதான மானியத்தை அரசு ரத்து செய்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றன. இது போன்ற குழப்பங்களுக்கு அரசங்காம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் இருந்து ஒரு நுகர்வோர், 'எல்பிஜி (LPG Cylinder) மீதான மானியத்தை மோடி அரசு ரத்து செய்துள்ளதா, ஏனென்றால் கடந்த 18 மாதங்களில் ஒரு பைசா கூட மானியம் கணக்கில் வரவில்லை, அதே நேரத்தில் எரிவாயு நிறுவனம் 859 ரூபாயுடன் மானிய சிலிண்டரை வவுச்சரில் எழுதி தருகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த @MoPNG_eSeva, அன்புள்ள வாடிக்கையாளரே - மானியம் ரத்து செய்யப்படவில்லை ஆனால் தற்போது உள்நாட்டு எல்பிஜி எரிவாயுக்கான மானியம் நடைமுறையில் உள்ளது. இவை பல்வேறு சந்தைகளில் மாறுபடும். மானியம் அல்லாத விலை மானிய விலையை விட அதிகமாக இருந்தால், அத்தகைய வேறுபாட்டின் அளவு சிலிண்டர்களின் உச்சவரம்புக்குள் இருக்கும், இது தற்போது ஒரு நிதி ஆண்டுக்கு 12 ரீஃபில்ட் சிலிண்டர்களாக இருக்கும். பணப் பரிமாற்றம் இணங்க வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றப்படுகிறது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மே -2020 முதல் உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் மானியம் உருவாக்கப்பட்டு வருகிறது, எனவே எந்த மானியமும் தற்போது வரை மாற்றப்படவில்லை. எல்பிஜி தொடர்பான வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால், நீங்கள் நேரடியாக வாடிக்கையாளர் பராமரிப்பு எண் 011-23322395, 23322392, 23312986, 23736051, 23312996 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று பதிலளித்துள்ளார்.

 

மானியத்தை எப்படி சரிபார்ப்பது?

நீங்கள் மானியத்தை சரிபார்க்க விரும்பினால், சில முக்கியமான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் மானியம் பெற தகுதியுள்ளவரா இல்லையா என்பது தெரிந்துகொள்ளலாம்.

 

  • உங்களிடம் இந்தேன் சிலிண்டர் இருந்தால், முதலில் இந்தியன் ஆயில் இணையதளம் indianoil.in க்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் எல்பிஜி சிலிண்டரின் புகைப்படத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு புகார் பெட்டி திறக்கப்படும் அதில் 'Subsidy Status' என்று எழுதி Proceed பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • 'Subsidy Related (PAHAL)' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதன் கீழ் 'Subsidy Not Received' என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஒரு புதிய உரையாடல் பெட்டி(CHAT BOX ) தோன்றும் அதில் 2 விருப்பங்கள் தோன்றும். இங்கே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் LPG ID தோன்றும்.
  • உங்கள் எல்பிஜி எரிவாயு இணைப்பு மொபைலுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது 17 இலக்க LPG ID ஐ எழுத வேண்டும்.
  • LPG ID ஐ உள்ளிட்ட பிறகு, சரிபார்த்து சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு, முன்பதிவு தேதி மற்றும் பிற விவரங்கள் நிரப்பப்பட்டவுடன் மானியத் தகல்வல்களை பார்க்க முடியும்.

மேலும் படிக்க:

Kisan Tractor Subsidy Scheme: டிராக்டர் வாங்க மாநில அரசு தள்ளுபடி வழங்கல்- விவசாயிகளே புத்திசாலிதனமாக திட்டதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Who gets LPG Cylinder subsidy? Government's new interpretation! Published on: 26 August 2021, 06:31 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.