சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா தொற்று (Covid-19) மிக மோசமான உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய, ஆசிய நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுவருகறது. இருப்பினும் கொரோனா தொற்று பரலில் இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன.
விழிப்புணர்வு தேவை (Need Awarness on Covid-19 pandemic)
முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரம் சார்ந்த முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், கொரோனா தொற்று இப்போது இருக்கும் நிலைமையைவிடப் படுமோசமாக உச்சக்கட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகள், தங்கள் குடிமக்களுக்கு கொரோனா குறித்து தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பரவுதல் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளி, கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, இருமல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற அடிப்படை பொது சுகாதாரக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான நிலைக்கு இழுத்து செல்லும் என எச்சரித்துள்ளார்.
தாராவிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு (WHO - appreciates dharavi)
மகாராஷ்டிரா மாநிலம், தாராவியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் மிக தீவிரமாக பரவி வந்த நிலையிலும், அதையும் கட்டுப்படுத்த முடியும் என்று உலகளவில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளன.
அவற்றில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா ஏன், மும்பை மாநகரத்தின் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியான தாராவியிலும் கொரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தாராவி மக்கள் முயற்சி (Measures taken by Dharavi people)
இது குறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் குறிப்பிடுகையில், மக்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவி பகுதியில் கொரோனா தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 6½ லட்சம் மக்களுக்கும் அதிகமாக வாழ்கிற பகுதி அது. அதிலும் சின்னச்சின்ன அறைகளில் 10 பேர் வரை வாழ்கிற அளவுக்கு மக்கள் நெருக்கம் அதிகமான பகுதி.
முதலில் கொரோனா வைரஸ் பரவலின் ஹாட் ஸ்பாட் (Hot spot) என்ற அளவுக்கு தாராவி சென்றது. ஆனால், வைரசைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தாராவியில் வசிக்கும் மக்கள் முழு ஊரடங்கைக் கடைப்பிடித்ததும், பரிசோதனைக்குப் பெரும்பாலானோர் ஒத்துழைப்பு அளித்ததும் மிகப்பெரிய பங்கு வகித்தது. மேலும் பல கட்டுப்பாடுகள் மூலம் தாராவியில் இப்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது என்றார்.
மேலும் படிக்க...
PM- Kisan: விவசாயிகள் வங்கி கணக்கில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பணம்!
உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க உதவும் கிசான் விகாஸ் பத்ரம் - சிறந்த சேமிப்புத் திட்டம்
Share your comments