'வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்,' என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பார்லிமென்டில் நேற்று நம்பிக்கை தெரிவித்தார். ராஜ்ய சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பெட்ரோலிய பொருட்களின் விலை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து, பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது: கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பெட்ரோல் விலை 50 - 58 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில், 2020 ஏப்ரல் - 2021 மார்ச் 31 வரை பெட்ரோல் விலை 5 சதவீத அளவிற்கே அதிகரித்துள்ளது. அதன் பின் இந்த வரி உயர்வும் குறைக்கப்பட்டுஉள்ளது.
பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price)
பெட்ரோல், டீசல் விலையை நிலையாக வைத்திருப்பதற்கு அனைத்து எம்.பி.,க்களும் மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டும். கடந்த, 2021 நவம்பர் 4ல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு முறையே, 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் குறைந்து உள்ளது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைத்துள்ளன. ஆனால் தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைக்காமல் உள்ளன.
ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து பேச்சு நடந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்
பட்டது. ஆனால் பல மாநிலங்கள் இதை விரும்பவில்லை.
பெட்ரோல், டீசல் வாயிலாக கிடைக்கும் அதிக அளவு வருவாயை இழக்க, இந்த மாநிலங்கள் விரும்பாததே இதற்கு காரணம். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையை கட்டுப்படுத்த, வரும் மாதங்களில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அமைச்சரின் இந்த பேச்சு வாயிலாக பெட்ரோலிய பொருட் களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதி (Import of crude oil)
ராஜ்யசபாவில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேலும் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளிலும், தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான ராணுவ நடவடிக்கைகளின் போதும், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது. அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால், வெனிசுலா, ஈரான் நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது நிலைமை மாறி வருகிறது. மிக விரைவில் இந்த நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை துவக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு நாடுகளிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதைத் தவிர, தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக ரஷ்யா கூறியுள்ளது. இதில் காப்பீடு, போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றை கவனத்தில் வைத்து தகுந்த முடிவு எடுக்கப்படும்.
'ஓபெக்' எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள், தங்கள் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இதனால் பல்வேறு வகைகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும், இவற்றின் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது.
மேலும் படிக்க
பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்குமா தமிழக அரசு? கள்ளுக் கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை!
பணியில் வீர மரணம் அடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கு ஸ்மார்ட் போன்!
Share your comments