1. செய்திகள்

இலங்கைக்கு நிபந்தனை விதித்த உலக வங்கி! ஏன்?

Deiva Bindhiya
Deiva Bindhiya
World Bank imposes condition on Sri Lanka!

இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தலித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதும் குறிப்பிடதக்கது.

எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறிக் கொண்டியிருக்கிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில், அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது.

இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்திருக்கிறது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக, பல தவறான தகவல் பரவிவருகிறது.

மேலும் படிக்க:

கோடை உழவு பயனுள்ளதாக இருக்குமா? தெரிந்திடுங்கள்!

“இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனைகளை வழங்குவோம். அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுடன், ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

போதுமான பெரிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை எனவும் அறிவித்துள்ளது.

சில அத்தியாவசிய மருந்துகள், வருமானமற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப்பரிமாற்றம் உதவி, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு பாடசாலை தேவைகள், உணவு, விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வளங்களை, நாங்கள் தற்போது மீண்டும் உருவாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

கூட்டுறவு சங்கங்கள், அதிக பயிர் கடன்களை வழங்கும்

இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்க கூறும்போது, “வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை, அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணியை செலவழிப்பதை விட அந்நிய செலாவணியை ஈட்டும் நாடாக இலங்கையை மாற்றுவதே தற்போதைய நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க:

கரும்பு விவசாயிகளுக்கு பாதிப்பு, சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு!

TNTET 2022 அறிவிப்பு: எப்போது வரும் ஹால்டிக்கேட்? அறிந்திடுங்கள்!

English Summary: World Bank imposes condition on Sri Lanka! Why? Published on: 25 May 2022, 06:17 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.