Krishi Jagran Tamil
Menu Close Menu

உலக உணவு தினம் - அக்டோபர் 16

Tuesday, 16 October 2018 01:33 PM

எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என ஆண்டு தோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.  அக்டோபர் 16 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் நாம் உயிர் வாழ அத்தியாவசியமான உணவைச் சிறப்பிக்கும் பொருட்டு கடந்த நவம்பர் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐநாவின்  20வது பொது மாநாட்டில்  உலக உணவு தினமாக (World Food Day) பிரகடனப்படுத்தப்பட்டது.

ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முயற்சியினால் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு தற்போது 192ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது

உணவின் முக்கியத்துவம், வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 

உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு கொடுப்பது ஒவ்வொரு அரசின் அவசியம் என ஐ.நா சபை தெரிவிக்கிறது. 

மக்களின் வாழ்க்கை முறை காரணமாக எதிர்காலத்தில் பணம் இருந்தாலும் உணவு கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் எல்லா மக்களுக்கும் உணவு கிடைக்கும் என புரிந்து கொள்ள வேண்டும்.

மையக்கருத்து - 2018 : 'நமது செயல்பாடு நமது எதிர்காலம் : 2030க்குள் பட்டினி இல்லாத உலகம் சாத்தியம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

உலகில் 80 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம். 

ஊட்டச்சத்து குறைவால் ஆண்டு தோறும் 30 லட்சம் குழந்தைகள், ஐந்து வயதுக்குள் உயிர் இழக்கின்றனர். 

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது. எனவே உணவை வீணாக்காதீர்கள்.

World Food Day- Oct-16
English Summary: World Food Day

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. ஜீரண கோளாறா? நம் முன்னோர்கள் கையாண்ட எளிமையான தீர்வு
  2. கரோனா காலகட்டத்தில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
  3. கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
  4. கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை
  5. கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்
  6. விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி
  7. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்
  8. உற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்
  9. கொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு
  10. 'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா?

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.